FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 19, 2016, 08:34:06 PM

Title: ~ தனித் தேங்காய்ச் சட்டினி – பச்சை மிளகாயுடன் ~
Post by: MysteRy on February 19, 2016, 08:34:06 PM
தனித் தேங்காய்ச் சட்டினி – பச்சை மிளகாயுடன்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fsad.jpg&hash=6a6a543886c2a611d24d3580adb059d530627d04)

தேவைப்படும் பொருள்கள்:

முற்றலான தேங்காய் – ஒன்று
பச்சை மிளகாய் – 5 அல்லது 6 (அல்லது தேவைக்கேற்ப)
உப்பு – 1 தேக்கரண்டி
( பெருப்க்காயப் பொடி / கரைசல் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 / 4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 2 ஆர்க்குகள்
எண்ணெய் – தாளிக்கச் சிறிதளவு

செய்முறை

முதலில் தேங்காயைத் துருவிக்கொள்ளவும். இந்தத் துருவல், பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை ஒன்றாய்ச் சேர்த்து மசிக்கவும். மின் அம்மியியில் முதலில் பச்சடி மிளகாயைப் போட்டு அதன் மேல் தேங்காய்த் துருவலைப் போடுவது நல்லது. இல்லாவிட்டால், மிளகாய் மசியாது. சிலர் புளிச்சுவைக்காக ஒரு கோலியளவு புளி சேர்த்து அரைப்பார்கள். புளி ஆகாதவர்கள் – அல்லது வேண்டாம் என்று நினைப்பவர்கள் – சட்டினியை அரைத்து முடித்த பிறகு அதில் தேவைக்கேற்ப எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து கொள்ளலாம். அல்லது தயிரும் சேர்க்கலாம். சில பச்சை மிளகாய்கள் அதிகமாய்க் காரும். அப்போது சட்டினியில் தயிரைச் சேர்ப்பது காரம் குறைய உதவும். கடைசியாகக் கறிவேப்பிலைகளைக் கிள்ளிப் போடவும். தேங்காய்ச் சட்டினியை அதிக நேரம் பாதுகாக்க முடியாது. ·ப்ரிட்ஜில் கூட ரொம்ப நேரத்துக்குச் சுவை குன்றாமல் இருக்காது. எனவே 3, 4 மணி நேரத்துக்குள் செலவழிப்பது நல்லது.