FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 19, 2016, 08:27:26 PM
-
பார்லி பொங்கல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fbar1-e1455631824500.jpg&hash=60a370a8e90f653c58407729ddd3d8298573c2fe)
தேவையான பொருட்கள் :
உடைத்த பார்லி – 1 கப்,
பாசிப் பருப்பு – கால் கப்,
ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு, சீரகம் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை – சிறிது,
நெய் – 1 டீஸ்பூன்,
பெருங்காயம் – 1 சிட்டிகை.
செய்முறை :
* இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பார்லியையும், பாசிப்பருப்பையும் வெறும் கடாயில் லேசாக தனித்தனியே வறுத்து, சிறிது நேரம் ஊற வைக்கவும்.
* நெய் சூடாக்கி, மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, பார்லி, பாசிப்பருப்புக் கலவையும் சேர்த்து ஒன்றுக்கு 3 அளவு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் போட்டு வேக வைக்கவும்.
* வெந்ததும் சூடாகப் பரிமாறவும்.
* சுவையான சத்தான் பார்லி பொங்கல் ரெடி.