FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 19, 2016, 08:20:15 PM
-
பூந்தி லட்டு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fjuy.jpg&hash=6b0fc3a767ece1349554520cbc5b665eff4896be)
தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 2 கப்
சர்க்கரை – 1 1/2 கப்
முந்திரிப்பருப்பு – 25 கிராம்
உலர்ந்த திராட்சை – 25 கிராம்
டைமண்ட் கல்கண்டு – 25 கிராம்
ஏலக்காய் பொடி – அரை தேக்கரண்டி
கிராம்பு – 8
பச்சைகற்புரம் – சிறிய துண்டு
கேசரிப் பவுடர் – கால் தேக்கரண்டி
நெய் – 50 கிராம்
செய்முறை:
முந்திரிப் பருப்பு, திராட்சையை நெய்யில் வறுக்கவும். கிராம்பைத் தூளாக பொடி செய்யவும்.
கடலை மாவை பூந்தி மாவுப் பக்குவத்தில் நீர் ஊற்றி கரைக்கவும். எண்ணெயில் பூந்திகளாக அதிகம் சிவக்காமல் வேக வைத்தெடுக்கவும்.
சர்க்கரை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, வேக வைக்கவும். கொதித்து நுரை வருகையில் ஒரு கரண்டி பால் விட்டு ஓரங்களில் இருக்கும் அழுக்கை சுத்தமாக எடுத்து விடவும்.
பூந்திக்கு சொன்னது போல் கம்பிப் பதம் வரும் வரை காத்து இருக்காமல் சற்று முன்பாக இளம் கம்பிப்பாகு வரும் சமயம் ஏலக்காய் பொடியை பாலிலோ நீரிலோ கரைத்து ஊற்றவும். கேசரிப் பவுடர், கிராம்புத் தூள், பச்சைகற்பூரம் சேர்க்கவும்.
பாகில் தயாரித்து வைத்திருக்கும் பூந்திகளைக் கொட்டி கிளறிவிடவும். பதமாகக் கிளறி வறுத்த முந்திப் பருப்பு, திராட்சை, டைமண்ட் கல்கண்டு இவைகளையும் சேர்த்து கிளறி இறக்கவும்.
சற்று ஆறியதும் கையில் நெய் தடவிக் கொண்டு உருண்டைகள் பிடிக்கவும்.