FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on February 18, 2016, 08:50:30 PM

Title: ~ செரிமானமின்மையை போக்கும் எளிய பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on February 18, 2016, 08:50:30 PM
செரிமானமின்மையை போக்கும் எளிய பாட்டி வைத்தியம்

(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xlf1/v/t1.0-9/12705421_1538164503147686_6397648496966689100_n.jpg?oh=db7a30deaa97865aee86e326496a466f&oe=5768753C&__gda__=1461919143_a48cbea0d2f2ba064a37dac3043389d3)

தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்தால் ‘சீரகக் குடிநீர்’ தயார். இந்த சீரகக் குடிநீரை தினமும் குடித்து வந்தால் எந்தவித செரிமானக் கோளாறுகளும் வராது.

• இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம் மூன்றையும் ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க செரிமானமின்மை சரியாகும்.

• கொத்தமல்லி பூவை தண்ணீரில் காய்ச்சி காலை மற்றும் மாலை வேளைகளில் குடித்தால் செரிமானமின்மை மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும். • எலுமிச்சையை அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் செரிமானமின்மை குணமாகிறது.

• பப்பாளி ஒரு நல்ல மலமிளக்கி. செரிமானமின்மையைப் போக்கி நிவாரணம் அளிக்கிறது.

• சீரகத்தை நன்றாக சிவக்க வறுத்து வைத்துக்கொண்டு, அப்பொடியை மூன்று வேளையும் ஒரு தேக்கரண்டி வெந்நீரில் குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

• வெதுவெதுப்பான நீரில் சுக்கு பொடியைக் கலந்து குடித்தால் செரிமானமின்மையில் இருந்து விடுபடலாம்.

• நான்கு பேரிச்சம்பழம் தினமும் சாப்பிடுபவர்களுக்கு செரிமானப்பிரச்சனை வருவதில்லை.

• உணவு எளிதில் செரிமானமாவதற்கு அகத்திக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.