FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on February 17, 2016, 10:21:39 PM

Title: ~ எந்த கீரையில் சத்து அதிகம் ~
Post by: MysteRy on February 17, 2016, 10:21:39 PM
எந்த கீரையில் சத்து அதிகம்

(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/12745992_1537869706510499_4141735571112586266_n.jpg?oh=d0230b483540ee5ecfe9dbac8a3ab7ea&oe=575F41F6)

உணவு பதார்த்தங்களில் மிகுந்த சத்துக்கள் நிறைந்தது என்றால் அது கீரை தான். என்னற்ற பலன்கள் கீரையில் அடங்கியுள்ளன.
கீரைவகைகளில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. கீரைகளை குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே கொடுத்து வருவது அவர்களை ஆரோக்கியமாக வைக்கும். சரி எந்தெந்த கீரையில் என்னென்ன சத்துகள் உள்ளன என்பது தெரியுமா?

முருங்கை கீரை :
முருங்கை மரத்தின் பூக்கள், காய், கீரைகள் என அனைத்துமே மனிதர்களுக்கு பயனளிக்கக்கூடியது. பாலில் உள்ளதை விட நான்கு மடங்கு இரும்பு சத்து முருங்கை கீரையில் உள்ளது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.
மேலும் வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை போன்றவையும் நீங்கும். இது போல் முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும்.
புதினா:
புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.
பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மை குறைவையும் நீக்குகிறது.
புதினா:
புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.
பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மை குறைவையும் நீக்குகிறது.
அகத்திக்கீரை:
கீரைகளில் ஒரு விஷேசமான தன்மையை உடையது அகத்திக்கீரை: அதாவது, மருந்து உட்கொள்ளும் நேரத்தில் அகத்திக்கீரையை உண்ணக்கூடாது. எனெனில், மருந்தின் வீரியத்தை குறைக்கும் சக்தி இதற்கு உண்டு. கண்பார்வை, நினைவாற்றலை பேணுவதற்கு அகத்தி முக்கிய பங்கு வகிக்கிறது.
வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பும், மலச்சிக்கல், காபி, தேநீர், இவை குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும். எனினும் அகத்திக்கீரையை மாதத்துக்கு 2 அல்லது 3 முறை மட்டுமே உணவில் சேர்த்துக்கொள்வது நலம்.