FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 17, 2016, 10:17:24 PM
-
வேப்பம்பூ சாதம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fvepp.jpg&hash=f3f2aef9ca9f2b1c12b7b1c89a94524782da34a9)
தேவையான பொருட்கள்:
அரிசி – 200 கிராம்,
வேப்பம்பூ – ஒரு கைப்பிடி அளவு,
மோர் மிளகாய் – 4, கடுகு,
உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்,
நெய் – சிறிதளவு.
செய்முறை:
* வேப்பம்பூவை நன்றாக கழுவி வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து, மோர் மிளகாயை கிள்ளிப்போட்டு வேப்பம்பூவையும், பெருங்காயத்தூளையும் சேர்த்து வறுத்து வைக்கவும்.
* ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் விட்டு சாதம் வைத்து, அதில் வறுத்த வேப்பம்பூ கலவை, உப்பு சேர்த்து, நெய் விட்டு நன்கு கலந்து சூடாக சாப்பிட்டால்.. நாவுக்கு ருசியாக இருக்கும்.
குறிப்பு: வேப்பம்பூ… பித்தம், தலைசுற்றல் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும். வேப்பம்பூ சீஸனில் அதை சேகரித்து, காயவைத்து நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.