FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 17, 2016, 09:12:22 PM
-
கொலஸ்ட்ராலை குறைக்கும் சத்தான ஆப்பிள் ரசம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fsara.jpg&hash=188cf6a0f71cd2ed5b458911ee0ef06191133c4f)
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை அணுக வேண்டியதில்லை என்பது பழமொழி.
ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலியன அடங்கியுள்ளன.
கரைபடக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வயிற்றுப் போக்கு, சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது.
ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் இரத்த சோகை விரைவில் நிவர்த்தியாகிறது. இரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது.
செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்கச் செய்கிறது.
இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. இன்சுலின் சுரப்பு நடைபெறுவதால் ரத்தச் சர்க்கரை குறைய உதவுகிறது.
கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது, சோடியம் உடம்புக்குப் பயன்படுவது போக அதிகப்படியாக சேராமல் பாதுகாக்கிறது.
இப்போது ஆப்பிள் ரசம் எப்படி வைப்பது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் – ஒரு கப்,
துவரம்பருப்பு – அரை கப்,
தக்காளி – கால் கப்,
கடுகு, சீரகம் – தலா அரைத்தேக்கரண்டி
மஞ்சள்தூள் – அரைத் தேக்கரண்டி
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
முதலில் துவரம் பருப்பு 2 தேக்கரண்டி, மிளகு ஒரு தேக்கரண்டி, காய்ந்த மிளகாய்-2, தனியா 4 தேக்கரண்டி ஆகியவற்றை வாணலியில் போட்டு வறுத்தி பின்னர் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
ஆப்பிள், தக்காளியை பொடியாக நறுக்கவும், மீதமுள்ள துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் நறுக்கி வைத்துள்ள ஆப்பிள் துண்டுகளை வேகவிடவும்.
இதில் தக்காளி, மசித்த பருப்பு, அரைத்து வைத்துள்ள மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து கொதிவந்ததும் இறக்கவும்.
இதில் கடுகு, சீரகம் தாளித்து ஊற்றிக் கொள்ளவும், பின்னர் கொத்தமல்லி தழை, கருவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான ரசம் ரெடி.