FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on February 17, 2016, 08:33:28 PM

Title: கவிதை வேண்டுமா
Post by: thamilan on February 17, 2016, 08:33:28 PM
இன்பம் வேண்டுமா
துன்பத்தை நேசி
வெற்றி வேண்டுமா
தோல்வியை நேசி

வளமை வேண்டுமா
எளிமையை நேசி
வலிமை வேண்டுமா
ஒற்றுமையை நேசி

உணவு வேண்டுமா
உழைப்பை நேசி
உயர வேண்டுமா
விடா முயற்சியை நேசி

நண்பன் வேண்டுமா
பகைவனை நேசி
நாளை வேண்டுமா
இன்றை நேசி

கவிதை வேண்டுமா
தமிழை பேசி
கடவுள் வேண்டுமா
ஏழை மனிதர்களை நேசி