FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 16, 2016, 09:09:51 PM
-
செட்டிநாடு இறால் குழம்பு
(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/12734192_1537154169915386_4901249852691017340_n.jpg?oh=2dea793c209bd19ba852e00fd99b22de&oe=576C12F7)
இறால் - 400 கிராம்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
அரைத்த பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 5
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
இறாலை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீருடன், உப்பு மஞ்சள் தூள் சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதில் உள்ள நீரை வடிகட்டி விடவும். வடிகட்டிய பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் மற்றும் கசகசா சேர்த்து, 2-3 நிமிடம் வறுக்கவும். பிறகு சூடு ஆறியதும், அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நைஸாக பேஸ்ட் போல் அரைக்கவும். பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தேங்காயை போட்டு 2-3 நிமிடம் வறுக்கவும்.
வறுத்த பொருட்கள் ஆறியதும், மிக்ஸியில் வறுத்த தேங்காய், பச்சை மிளகாய் போட்டு, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். தேங்காயை வறுத்த அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும், பின் அதில் தக்காளி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும், அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு, 3-4 நிமிடம் வேக வைக்கவும். பின் அதில் தேங்காய் பேஸ்ட் சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள இறாலைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான செட்டிநாடு இறால் குழம்பு ரெடி