ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 090
இந்த களத்தின்இந்த நிழல் படம் Thamilanஅவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் வியாழக்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F090.jpg&hash=e1de0ad8956f3151a2a21fa9790cbfa6908698d8)
நம் முன்னோர்கள் அறிவை
கண்டு வியக்கிறேன் நான்
வேளாண்மையில் மனித நேயத்தோடு
தன் சந்ததிக்குமாக
சேர்த்து உழைத்தார்கள் ..
நீர்வளம் காக்க
குளம் வெட்டினால் மட்டும்
நிலத்தடி நீர் உயராது என்று
உன்னித்து பார்த்து பனை வளர்த்து
நதி வற்றாமல் பாதுகாத்து
பயன் கண்டார்கள் ....
நல்ல காற்றை சுவாசித்தாலே
போதும் பல வருடம் கூட வாழலாம்
புழுதி புகைந்து வரும்
கரியமிலவாயு எடுத்துக்கொண்டு
பிராண வாய்வை நமக்கு
கொடுக்கும் மரங்களாக
நட்டு வைத்துநோயில்லாத
வாழ்வை கொடுத்து வம்சம் காத்தனர் ...
அன்று போதிய கல்வி அறிவு இல்லை
ஆனால் சுயநலம் இல்லாத சுய சிந்தனை
இருந்தது ..எதை எப்போது விதைக்க
எப்போது அறுக்க ,அறுசுவையோட
உண்டு மகிழ்ந்து இயற்கையை
அனுசரித்து வாழ்ந்தான் .....
இன்று உயர்ந்த கல்வி தகுதி
ஐந்து இலக்க சம்பாத்தியம்
சொந்தமாக வீடு சொகுசான
குளிர்ரூட்டப்பட்ட மகிழுந்து
என சொகுசான வாழ்க்கை ...
முகத்துக்கு திரை போட்டு
கடிவாளம் கடின குதிரையாய்
பணம் என்னும் காகிதம் தேடி
உன்ன மறந்து உறங்க மறந்து
போலியாய் ஒரு வாழ்க்கை
வாழும் மனிதா ....
விழித்துகொள்
இயற்கையின் சுவாசம் மரங்கள்
உனக்கும் உன் சந்ததிக்கும்
நல்ல நீர் காற்று வேண்டுமாயின்
மரங்களை வளர்த்து
இயற்கையை காப்போம் ...