FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 15, 2016, 10:10:34 PM
-
அயிலை மீன் குழம்பு
(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/12705211_1537147326582737_7561837165809126869_n.jpg?oh=1e175f632cd495ee8c12608e399c7287&oe=57668D4B)
முழு அயிலை சுத்தம் செய்தது - 10
நல்லெண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம்- 2,தக்காளி - 3 சேர்த்து மிக்சியில்
நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
பச்சை மிளகாய் (கீறியது) - 3
வெந்தயம் - 3டீஸ்பூன்
கடுகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
பூண்டு - 4
கறிவேப்பில்லை - 1 கொத்து
மீன் மசாலா தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சல் தூள் -1 டீஸ்பூன்
மிளகாய் தூள் -2டீஸ்பூன்
மல்லிப்பொடி - 2டீஸ்பூன்
புளி - பெரிய எலுமிச்சை அளவு தண்ணீரில் கரைத்து
புளி கரைசலை தயார் செய்யவும்.
தேங்காய்ப்பால் - 1 டம்ளர்
கொத்துமல்லி - 2 டீஸ்பூன்
வதக்கிய வெண்டைக்காய் (நறுக்கியது)-10
உப்பு தேவைக்கேற்ப
* மீனைநன்குசுத்தம்செய்துக்கொள்ளவும்
எல்லாபொருட்களையும்தயாராக எடுத்துக்கொள்ளவும்
* அகன்ற பாத்திரம் சூடானவுடன் ஆயிலை ஊற்றி கடுகுசீரகம்,வெந்தயம்,பூண்டு,பச்சை மிளகாய்,கறிவேப்பில்லை நன்றாக வதக்கவும்.
* அரைத்த பெரிய வெங்காயம்-தக்காளி விழுதையும் சேர்த்து வதக்கவும்.
* மீன் மசாலா தூள்,மஞ்சல் தூள்,மிளகாய் தூள்,மல்லிப்பொடி சேர்த்து வதக்கவும்.
* புளி கரைசலை சேர்க்கவும்..உப்பு தேவைக்கேற்ப சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.மீனை சேர்க்கவும்
* வெண்டைக்காயை வதக்கிக்கொள்ளவும்
* வதக்கிய வெண்டைக்காய் சேர்க்கவும்.தேங்காய்ப்பால் சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்கவும்.
* கொத்துமல்லி தூவி இறக்கவும்
இப்போது அயிலை மீன் நாட்டு குழம்பு ரெடி.
இதே முறையில் மற்ற மீன் வகைகளையும் செய்யலாம்.
குறிப்பு
•ஆங்கிலத்தில் மேக்கேரில் ஃபிஸ் என்று அழைப்பார்கள்.
•அயிலை மீனில் ஒமேகா-3 அதிகமாக உள்ளது.
•ஒமேகா-3 இதய மற்றும் கொலஸ்ட்ரால் வியாதிகளுக்கு அருமருந்து.
•கட்டுப்படாத சர்க்கரை வியாதி கூட ஒமேகா-3 கட்டுப்படுத்தும்.