FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 15, 2016, 08:56:53 PM
-
ஆம்லெட்
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/12728949_1536853493278787_6182114661206153813_n.jpg?oh=a17902a5e55b225bd4878cfe4fcf570f&oe=575D4EF6&__gda__=1465788880_2310e13901a4f5e6d3f78d4175d18b6d)
தேவையானவை:
முட்டை_2
பால்_ஒரு டீஸ்பூன்
மிளகு 4 பொடித்துக்கொள்ளவும்.
உப்பு_சிறிது
பட்டர் அல்லது எண்ணெய்_சிறிது
செய்முறை:
ஒரு கடாயை அடுப்பில் ஏற்றவும்.தீ மிதமாக இருக்கட்டும்.
ஒரு பௌளில் முட்டையை உடைத்து ஊற்றி whisk ஆல் நன்றாகக் கலக்கவும்.
பிறகு பால்,உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
கடாயில் பட்டரைப் போட்டு அது கரைந்ததும் முட்டைக் கலவையை ஊற்றி லேஸாக சுழற்றி விடவும் அல்லது அதுவாகவே சுற்றிலும் பரவிவிடும்.
பாதி வேகும்போதே மிளகுத்தூளை ஆம்லெட் முழுவதும் தூவி முற்சூடு செய்த அவனில் ஒரு சில நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.இவ்வாறு செய்வதால் மேல் பகுதியும் நன்கு வெந்துவிடும்.கடாய் oven safe உள்ளதாக இருக்கட்டும்.
படத்தில் காட்டியுள்ளவாறு ஒரு தட்டில் வைத்து மேலே சிறிது மிளகுத்தூளைத் தூவிவிடவும்.
எளிதாகச் செய்யக்கூடிய சுவையான ஆம்லெட் தயார்.
மிளகுத்தூளிற்குப் பதிலாக பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் + பச்சைமிளகாய்,வெங்காயத்தாள்,துருவிய சீஸ் போன்று நமக்கு விருப்பமானதைப் போட்டு அலங்கரித்துக்கொள்ளலாம்.