FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 14, 2016, 10:08:14 PM
-
கொழுக்கட்டை பொடிமாஸ்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fkozhukattai-podimas.jpg&hash=4ae79c686cacb053a732389a6725fc20e29afe8d)
தேவையான பொருட்கள்:
இடியாப்ப மாவு – 2 டம்ளர் பாசிபருப்பு – 1 டம்ளர் வரமிளகாய் – 3 இஞ்சி – 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) தேங்காய் துருவல் – அரை மூடி எலுமிச்சை பழசாறு – 2 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் தாளிக்க கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை
செய்முறை:
முதலில் இடியாப்ப மாவில் உப்பு சேர்த்து 2 டம்ளர் மாவுக்கு 3 டம்ளர் தண்ணீர் கொதித்த நீர்
ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறு சிறு சீடைகளாக உருட்டி, வேட்டில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பாசி பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி பின் சீடைகளையும், ஊறவைத்த பாசி பருப்பையும் சேர்த்து, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து பரிமாறவும்.