FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on February 14, 2016, 09:46:38 PM

Title: ~ உடல் எடையை குறைக்கும் ப்ளாக் டீ ~
Post by: MysteRy on February 14, 2016, 09:46:38 PM
உடல் எடையை குறைக்கும் ப்ளாக் டீ

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fblac.jpg&hash=e4162cb1f6b4270c5f094ad77d143ce9c8f5ad45)

பொதுவாக டயட்டில் இருப்போர் ப்ளாக் டீ தான் அதிகம் பருகுவார்கள், உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது ப்ளாக் டீ.

* ப்ளாக் டீயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் உடலின் எனர்ஜி அதிகரிப்பதுடன், ஸ்டாமினா அதிகரிக்கும். மேலும் அது உடலில் தங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.
* இதயத்திற்குள் இரத்த ஓட்டம் சீராக இருத்தல், கொழுப்புப் பொருட்களை இதயத்தில் அண்ட விடாமல் தடுத்தல், பல இதய நோய்களைத் தவிர்த்தல், இதயத்தில் உள்ள தசைகளை ஆரோக்கியமாக வைத்திருத்தல் உள்ளிட்ட பல நன்மைகளுக்கு ப்ளாக் டீ உதவுகிறது.
* ப்ளாக் டீயிலுள்ள பாலிஃபீனால்கள் புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடுகிறது. ப்ளாக் டீயில் உள்ள TF-2 என்ற பொருள் புற்றுநோய் செல்களை அழிப்பதுடன், பிற சாதாரண செல்கள் தாக்கப்படாமல் இருக்கவும் உதவுகிறது.
* ப்ளாக் டீயில் உள்ள டானின் என்ற வேதிப்பொருட்கள் நோய்கள் உருவாக காரணமான பலவிதமான வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை நம் உடலில் அண்டவிடாமல் தடுப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிரிக்கிறது.
* மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகமாக்குவதில் ப்ளாக் டீயில் உள்ள குறைந்த அளவிலான காப்ஃபைன் உதவுகிறது. தினமும் ப்ளாக் டீயை தொடர்ந்து பருகுவதன் மூலம், நரம்பு மண்டலங்கள் வலுவாகும், ஞாபக சக்தி அதிகரிக்கும்.
* ப்ளாக் டீயைக் குடிப்பதால், நம் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புச் சத்துக்கள் குறைந்து விடுகிறது, உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.