FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 14, 2016, 09:29:23 PM
-
கீரை உப்புமா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fdownload2.jpg&hash=80d42ea094816609bedbb12415cf42b1b696a40b)
தேவையான பொருட்கள்
கீரை – 1 கட்டு இட்லி அரிசி – 2 கப் துவரம் பருப்பு – ¾ கப் தேங்காய் – ½ மூடி மிளகாய் வற்றல் – 4 சீரகம் – 1 ஸ்பூன் உப்பு – சுவைக்கேற்ப கடுகு, உளுந்து – 1 ஸ்பூன் மோர் மிளகாய் – 4 கறிவேப்பிலை – 1 ஈர்க்கு எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
இட்லி அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். கீரையை (சிறு கீரை, அரை கீரை, தண்டு கீரை, பாலக் கீரை, பொன்னாங்கன்னி கீரை இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம்.) பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். இட்லி அரிசி, துவரம்பருப்பு, தேங்காய், மிளகாய் வற்றல்,
சீரகம் ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென்று ரவை பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய கீரை, உப்பு சேர்த்து கரைத்து, இட்லியாக சுட்டு எடுக்க வேண்டும். அதை கையினால் உதிர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, அதில் மோர் மிளகாய் சேர்த்து, பிறகு உதிர்த்த கீரை இட்லியை போட்டு நன்கு சூடு ஏறும்வரை கிளற வேண்டும். கீரை உப்புமா தயார். இது மிகவும் ஆரோக்கியமான, சத்தான சிற்றுண்டியாகும். இந்த கீரை உப்புமாவை சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.