FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 14, 2016, 09:03:30 PM
-
லெமன் ரைஸ்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fmaxresdefault1-e1454856649468.jpg&hash=5a084d316035c56dd6d7887fe7a1fa65513e67d2)
தேவையானவை:
உதிர் உதிராக வடித்த சாதம் – ஒரு கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன் (அல்லது தேவைக்கேற்ப), உடைத்த முந்திரி – 2 டீஸ்பூன் (வறுக்கவும்), தோல் நீக்கி, பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிதளவு, பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்), கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2, நல்லெண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை
சாதத்தை ஆறவைத்து, சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு கரண்டியால் கிளறிவிடவும். ஒரு சிறிய கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள் போட்டுக் கலக்கி வைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, பெருங்காயத்தூள் போட்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து சிவக்க வறுக்கவும். அதில் எலுமிச்சைச் சாறு – உப்பு – மஞ்சள்தூள் கலவையை சேர்த்துக் கிளறி, ஆறிய சாதம், வறுத்த முந்திரி சேர்த்துக் கலந்து, அடுப்பை நிறுத்தவும்.
குறிப்பு: உபயோகிக்கும்போது கைபடாமல் கரண்டி, ஸ்பூன் பயன்படுத்தி உபயோகிக்கவும். இந்த லெமன் சாதம் உடலைக் குளுமைப்படுத்தும்; உடலுக்கு சக்தி கொடுக்கும்