FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 14, 2016, 08:46:42 PM
-
கீரை அவியல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fsl2256.jpg&hash=19af7095e12c028178cc88d8e1decd32544779a1)
கீரை – 1 கட்டு
துவரம் பருப்பு – 1/4 கப்
உப்பு – தேவைகேற்ப்ப
மசாலா
———–
தேங்காய் – 1/2 கப்
சீரகம் – 1/2 தே.க
பச்சரிசி – 1/2 தே.க
வற்றல் மிளகாய் – 2
உப்பு – தேவைகேற்ப்ப
தாளிக்க
எண்ணெய் – 1 தே.க
கடுகு – 1/2 தே.க
வற்றல் மிளகாய் – 1
பெருங்காயம் – 1/4 தே.க
கறிவேப்பிலை – கொஞ்சம்
செய்முறை
முதலில் கீரையை நன்றாக மண் போக அலசிவிட்டு
பொடியாக அரியவும்.
பருப்பை வேகவைக்கவும்.
ஒரு பானில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை
தாளித்து அதில் கீரையை போட்டு ஐந்து நிமிடம் வதக்கி
பின் தண்னிர் விட்டு வேகவிடவும்.
பருப்பையும், உப்பு, அரைத்த மசாலா எல்லாம் சேர்த்து
நன்றாக பத்து நிமிடம் வேக விடவும்.
வாசனைக்கு 1 தே.க தேங்காய எண்ணெய் விட்டு
மூடி வைக்கவும்.
இது சாத்திற்க்கு நன்றாக இருக்கும்