FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 14, 2016, 04:13:54 PM
-
வெங்காய பக்கோடா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fopakodafinal2-e1454860820418.jpg&hash=bd1b54aaae9adc1baa09b8c7e5fb8b4f71d1cec2)
தேவையான பொருட்கள்
கடலை மாவு – 1 கப்
பெரிய வெங்காயம் – 4
சீரகம் – 1 / 2 தேக்கரண்டி
மிளகாய்தூள் – 1 1 /2 தேக்கரண்டி
ஆப்ப சோடா – அரை சிட்டிகை
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை தோல் நீக்கி மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலை மாவுடன் சீரகம், மிளகாய்த்தூள், ஆப்ப சோடா,உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தை விட கெட்டியாக
பிசைந்து வைக்கவும்
வெங்காயத்துடன் சிறிது உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்
5 நிமிடங்கள் கழித்து வெங்காயத்தை பிழிந்து எடுத்து மாவுடன் சேர்த்து பிசறி வைக்கவும்.
எண்ணெயை நன்கு காய வைத்து சிறிது சிறிதாக உதிர்த்து விட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.