FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 14, 2016, 04:10:07 PM
-
பூரிக்கான கிழங்கு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2FIMG_8526-e1454830194696.jpg&hash=814aa25b58dab3ac03ac44c9f124b367aa96332e)
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 2
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 5
மஞ்சள்தூள் – ½ டீ ஸ்பூன்
கடுகு – ½ டீ ஸ்பூன்
உளுந்து – ½ டீ ஸ்பூன்
கடலைப்பருப்ப்பு – ½ டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக உதிர்த்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். வானலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கவும். சூடான எண்ணையில் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து பொரிக்கவும். கடுகு பொரியும் சத்தம் நின்றபின் கறிவேப்பிலை சேர்க்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கி வளையும் தன்மையுடையதாய் மாறிவிடும். இதில் மஞ்சள்தூள் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கவும். வெங்காயம் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவைக்கவும். வெங்காயம் நன்கு வெந்தபின் அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கூட்டு போல் வரும்போது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.