FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 14, 2016, 04:08:10 PM
-
சிக்கன் லெக் ரோஸ்ட்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2F1368845-e1454860399233.jpg&hash=e9b33229ddad30568a7011ad74971395a9938c4d)
தேவையான பொருட்கள்:
சிக்கன் லெக்ஸ் – 5
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/4 ஸ்பூன்
இஞ்சி&பூண்டு விழுது – 1 ஸ்பூன்
உப்பு – 3/4 ஸ்பூன்
சோம்பு தூள்(விரும்பினால்) – 1 பின்ச்
வெங்காயம் – 2
தக்காளி – 1
கறிவேப்பிலை – சிறிது
எண்ணை(விரும்பினால் தேங்காய் எண்ணை) – 4 ஸ்பூன்
செய்முறை:
சிக்கனில் மஞ்சள்,மிளகாய்,உப்பு,கரம் மசாலா,சோம்பு தூள் மற்றும் இஞ்சி &பூண்டு விழுது சேர்த்து 2 மணிநேரம் ஊற விடவும்
பின்பு எண்ணையை ஒரு பெரிய கடாயில் காயவைத்து அதில் சிக்கன் கால்களை போட்டு பிரட்டி விடவும்
சிறிது நேரத்தில் நீர் விடும் பின்பு நீரை வற்ற வைக்கவும்.
சுமார் 15-20 நிமிடங்களில் சிக்கன் கால்கள் முக்கால்பாகம் வெந்தபின்பு பச்சையாக நறுக்கிய வெங்காயம் தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பிரட்டி விடவும்
நன்கு வற்றி ரோஸ்ட் போல வரும் வரை தீயை குறைத்து பிரட்டி விடவும்
சுவையான சிக்கன் லெக் ரோஸ்ட் ரெடி