FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 13, 2016, 11:15:49 PM
-
பூண்டு மிளகு பால்
(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/12687918_1536142003349936_9185114919144594675_n.jpg?oh=06e18032a5f6b2d28e94751285e893de&oe=572EA2FA)
தேவையான பொருட்கள் :
பால் - 1 கப்
பூண்டு - 3 பற்கள்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் பூண்டைத் தட்டிப் போட்டு நன்கு பூண்டை வேக வைக்க வேண்டும்.
* பூண்டு நன்கு வெந்ததும், அதில் பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும்.
* பின் அதில் மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கரண்டியால் பூண்டை நன்கு மசித்தால், பூண்டு பால் ரெடி!!!