FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 13, 2016, 11:12:12 PM

Title: ~ வாழைப்பூ பச்சடி ஆரோக்கிய சமையல் ~
Post by: MysteRy on February 13, 2016, 11:12:12 PM
வாழைப்பூ பச்சடி ஆரோக்கிய சமையல்

(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/12715702_1536141913349945_1691879043219429238_n.jpg?oh=dab5073ef98e59c79dc4afe87d72c10a&oe=5733C4BF&__gda__=1466669721_980e658af8ff588579c3a23fb0a3f9d4)

தேவையான பொருட்கள் :

வாழைப்பூ – 1
தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
தயிர் – 100 மி.லி.
உப்பு – தேவைக்கு

செய்முறை:

* வாழைப்பூவை சிறிதாக நறுக்கி, சிறிது நீர் தெளித்து வாணலியில் கொட்டி, மூடிவைத்து சிறுதீயில் வேகவையுங்கள். வெந்ததும் இறக்கி, ஆறவிடுங்கள்.

* தேங்காய் துருவல், சீரகம், பச்சைமிளகாயை மிக்சியில் அரைக்கவும். அத்துடன் வாழைப்பூவையும் கலந்து ஒரு சுற்று மட்டும் ஓடவிட்டு, உப்பு, தயிர் கலந்து பரிமாறுங்கள்.

* வாழைப்பூ உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் தன்மையுள்ளது. அதனால் ரத்த மூலம் மற்றும் மாதவிடாய் காலத்தில் உண்டாகும் அதிக குருதி போக்கிற்கு இது சிறந்த உணவு. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலும் நீங்கும்.