FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 13, 2016, 09:56:34 PM
-
இறால் வறுவல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fdab-on-tissue-paper-Prawns-Fry-Goan-e1454860497699.jpg&hash=bd1d6b1d76015919cd0714b818cf651b3a743837)
தேவையான பொருட்கள் :
இறால் – 500 கிராம்
சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 250 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
தக்காளி – 250 கிராம்
சோம்பு – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
மிளகாய் பொடி – 5 தேக்கரண்டி
எண்ணெய் – 100 கிராம்
உப்பு – தேவைகேற்ப
கறிவேப்பிலை, கொத்துமல்லி நறுக்கியது.
செய்முறை:
இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி, அதில் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு வெங்காயம் போட்டு வதங்கியபின், சுத்தம் செய்யப்பட்ட இறாலையும், உப்பு, மஞ்சள் பொடியையும் போட்டு நன்கு கிளறவும்.
கிளறியபின், பொடியாக வெட்டி வைத்துள்ள தக்காளி, மிளகாய்த்தூளை போட்டு, நன்கு கிளறி மூடி வைக்கவும். நன்கு வறுபட்டப்பின் இறக்கி பரிமாறவும்.