FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 13, 2016, 09:36:14 PM
-
மோர் மிளகாய்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fp1030164.jpg&hash=267ae1991b8d0ea68b3cbf6eaf44ef2af6d357a5)
மோர் மிளகாய் செய்யத் தேவையான பொருட்கள்:
பச்சைமிளகாய் – 50 மிளகாய் (எண்ணிக்கை)
தயிர் – 2 கப்
உப்பு – 2 டீ ஸ்பூன்
செய்முறை :
பச்சைமிளகாயை தண்ணிரில் நன்கு அலசிவிட்டு நீளவாக்கில் நறுக்கவும். நறுக்கும்போது மிளகாய் இருபகுதிகளாக தனித்தினியே பிரிந்துவிடாதபடி காம்புப்பகுதி அருகே நறுக்காமல் விட்டுவிடவும். இதேபோல் எல்லா மிளகாயையும் நறுக்கிவைத்துக்கொள்ளவும். தயிரில் உப்பைச் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும். நறுக்கிய மிளகாயை தயிரில் போட்டு கலக்கிவைக்கவும். அவ்வப்போது மிளகாய் மீது தயிர் நன்றாக பரவும்படி கலக்கிவிடவும். இதை அப்படியே இரண்டு – மூன்று நாட்கள் வரை ஊறவிடவும். மிளகாய் நன்கு ஊறி லேசான மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும். இந்நிலையில் தயிரை வடித்துவிட்டு மிளகாயை தனியாக எடுத்து வெயிலில் இட்டு உலர்த்தவும். இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு இதுபோல் வெயிலில் இட்டு உலர்த்தவும். மிளகாய் நன்கு காய்ந்து சருகுபோல் ஆகிவிடும். இதை காற்றுபுகாத டப்பாக்களில் வைத்திருந்து பயன்படுத்திக்கொள்ளலாம். எண்ணையைக் காயவைத்து தேவையான அளவு பொரித்துக்கொள்ளலாம்.