FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 13, 2016, 09:14:32 PM
-
சப்பாத்தி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fchappathy.jpg&hash=55f781dda11723298538d3374bb84804800d5889)
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 2 கப்
உப்பு- தேவையான அளவு
பால்- 1/4 பங்கு
சுடுதண்ணீர்- 3/4 பங்கு
எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு
செய்முறை :
1. கோதுமை மாவு, உப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து சிறிது சிறிதாக பால், சுடுதண்ணீர் சேர்த்துப் பிசையவும்.
2. மாவுடன் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
3. பிசைந்த சப்பாத்திமாவை ஈரத்துணியில் சுற்றி வைக்கலாம். அல்லது மாவைக் காற்றுப் புகா வண்ணம் மூடியிட்டு மூடி விடவும்.
4. இரண்டு முதல் மூன்று மணி நேரங்கள் ஊறிய பிறகு மாவை உருட்டிச் சப்பாத்திகளாக இட்டுக் கல்லில் போட்டு எடுக்கவும்.
5. கல்லில் போட்டுப் முன்னும் பின்னும் வெந்ததும் திருப்பி எடுக்கலாம். எண்ணெய் அல்லது நெய் தடவிப் பரிமாறவும்.
குருமா, தக்காளி கொத்ஸு, குடமிளகாய் கொத்ஸூ, உருளைக்கிழங்கு மசாலா, துவையல்,பாலக் பன்னீர், பாலக் சன்னா என்று அட்டகாசமான இணை உணவுகள் இருக்கின்றன. அவற்றைச் சப்பாத்தி-பூரிக்கான இணையுணவுகள் பகுதியில் பதிப்பிக்கவிருக்கிறேன்