FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 12, 2016, 11:35:17 PM
-
பீட்ருட் சட்னி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2F1-e1454828078848.jpg&hash=30ca8583735e5ada0c04e98cedc6d1eb91070254)
தேவையானபொருட்கள்
பீட்ரூட் – 1 சிறியது
வெங்காயம் – சிறியது 1
மிளகாய் வற்றல் – 5
கடலைப் பருப்பு – அரை டேபிள் ஸ்பூன்
உளுந்துப் பருப்பு – அரை டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
புளி – சிறிது
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
1.பீட்ரூட்டை தோல் சீவி, துருவிக்கொள்ளவும்.
2.வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
3.கடாயில் எண்ணெய் காயவைத்து கடலைப்பருப்பு, உளுந்துப் பருப்பை பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.
4.பின்னர் வெங்காயம்,மிளகாய்வற்றல் சேர்த்து வதக்கவும்.
5.வெங்காயம் வதங்கியதும் பீட்ரூட் துருவல் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும் .
6.இறுதியாக தேங்காய்த்துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி ஆறவைக்க வேண்டும் .
7.ஆறியதும் தேவையான உப்பு,புளி சேர்த்து கெட்டியாக அரைத்தெடுக்கவும்.இப்பொழுது கலர்புல்லான பீட்ருட் சட்னி தயார் .