FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on February 12, 2016, 11:20:08 PM
-
பத்தே நாளில் பத்து கிலோ எடை குறையுமா ?…
வாழ்க்கை முறை மாறியதால் உடல் பெருத்த மக்களின் பெரும் கனவுக்கு இங்கே விடை காண முயலும் விதமாக இந்த கொடம்புளி.
பத்தே நாளில் பத்து கிலோ எடை குறையுமா ?….குறையும் .
ஆனால் பத்து நாளில் குறையாது ஆனால் நாற்பது நாளில் குறையும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fdra.jpg&hash=a950e6763037a7f35bbc2a8cedd39abdf69ae17d)
கீழ் வரும் விசயங்களை நீங்கள் கடை பிடித்தால் ?
1.கொடம்புளி சூப்- காலை வெறும் வயிற்றில் சாப்பிடணும்.
கொடம்புளி சூப் எப்படி செய்யணும்?
கொடம்புளி ஐம்பது கிராம் – முன்னூறு மிலி வெந்நீரில் இரவிலேயே ஊற வைத்து விடணும்.
கொள்ளு (கருப்பு காணம்) இருபது கிராம் + நூறு கிராம் வெந்நீரில் ஊற வைத்து விடணும் .
காலையில் இந்த நானூறு மிலி-யையும் கொதிக்க வைத்து நூறு மிலியாக வற்ற வைத்து எடுத்து வைக்கணும்.
இந்த நூறு மிலியாக வற்றவைத்து -வடிகட்டிய சூப்பில் சிறிது பொடி செய்து வைத்துள்ள வாய்விடங்கம்,சுக்கு,மரமஞ்சள் -இவைகளையும் தேன் ஐந்து மிலியும் கலந்து வெறும் வயிற்றில் பருகவும்.
2 .குளிர் பானங்களை குடிக்கவே குடிக்கவே கூடாது
3 .உணவிற்கும் படுக்கைக்கும் குறைந்தது 3 மணி நேரமாவது இடைவேளை விடணும்.பகலில் தூங்கவே கூடாது .
4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்தணும்.
5 .வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டு நோன்பு இருக்கணும்.
6 .வாழப்பழத்தை சாப்பிடவே கூடாது
8 சைவ உணவிற்கு முடிந்தால் மாறிடணும்.அசைவம் பொரிக்காத மீன் வேண்டுமானால் சாபிடலாம்.
9 .எண்ணையில் பொறித்த உணவுகளை ,சைனீஸ் உணவுகளையும் நிறுத்தணும்.
10 . டிவி பார்த்து கிட்டே சாப்பிட கூடாது.சாப்பிடும் போது பேச கூடாது.
மந்திரத்தில் மாங்காய் காய்க்காது .உடல் பயிற்சிகள் -யோகாசனங்கள் செய்யணும்.
கொடம்புளி எப்படி இருக்கும் .இந்த high resolution படம் உங்களுக்காக .