FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Yousuf on January 10, 2012, 04:49:57 PM

Title: பிஞ்சிலே நஞ்சை விதைக்கும் கொடியவர்கள்!!
Post by: Yousuf on January 10, 2012, 04:49:57 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-Fdw5iyLvS3Q%2FTbs9v7IsRFI%2FAAAAAAAAFUY%2FEO2CtyERIW4%2Fs200%2Fchristiana_2_172.jpg&hash=5f0c8a3be92c351f1d276f93c1d25be0346544fb)

ஏழை மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதால் பள்ளியின் ஒழுக்கமும், தரமும் கெட்டுவிடும், ஆசியர்களிடமும் ஒழுங்கு குலையும் என்று சென்னை அடையாறிலிருக்கும் ஸ்ரீ சங்கரா சீனியர் செகண்டரி பள்ளி கருதுவதாக வந்த செய்தியைப் படித்திருப்பீர்கள்.

இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு மாணவரின் செயல்திறனையும் அவரது பொருளாதார நிலைமையையும் இணைத்து ஒரு அறிக்கையை சுற்றுக்கு விட்டுள்ளார்கள். அதோடு, பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், அனைவருக்குமான கல்வி உரிமை மசோதாவை எதிர்த்து போராடும் படியும் தூண்டியிருக்கிறார்.

தமிழக விவசாயிகள் பாத்திரம் பண்டங்களை தூக்கிக் கொண்டு ஊர் ஊராக பிழைப்பு தேடி அலைந்துக்கொண்டிருக்கிறார்கள். நிரந்தர வேலையில்லாமல் கிடைக்கும் வேலையை செய்து பிழைக்கும்படி நகரத்தை நோக்கி துரத்தப்படுகிறார்கள்.

நமது பிள்ளையாவது படித்து முன்னேறினால் போதும் என்ற பெற்றோரின் நம்பிக்கையை சுமந்து வரும் அந்த குழந்தைகளின் குறைந்த பட்ச ஆரம்ப கல்விக்கான வழியை ஆசிரியர்களும், பெற்றோர்க்ளும் சேர்ந்து அடைக்கிறார்கள். அவர்களைக் கண்டுதான் மூக்கைப் பொத்துகிறார்கள். துரத்தியடிக்கிறார்கள்.

இந்திய உழைக்கும் மக்களின் கல்வி உரிமையை மறுத்தது பார்ப்பனியம். சம்ஸ்கிருதம் பேசினால் நாக்கை அறுக்க வேண்டும் என்றது மனுஸ்மிருதி. இன்று அடையாரில் இருக்கும் ஒரு பார்ப்பனப் பள்ளியும், பார்ப்பன முதல்வரும் ஏழைகளை தடை செய்வோம் என்று பகிரங்கமாக பேசுகிறார்கள்.

புதிய பார்ப்பனியம்! பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் அடிமைகள் என்று பார்ப்பனியமும், வெள்ளை நிற ஆரியர்களைத் தவிர மற்றவர்கள் அடிமைகள் என்று ஹிட்லரின் நாசிசமும் பேசிய வரலாறு இன்று திரும்புகிறது. ஒரு வேளை இந்தியா வல்லரசாக வேண்டு மென்பதற்காக ஏழைகளை மொத்தமாகக் கொன்றுவிடுவார்களோ தெரியவில்லை.

சிந்திக்கவும்: உழைக்கும் ஏழை மக்கள் முன்னேற கூடாது என்று நினைக்கும் இந்த கொடூர சிந்தனை ஒழிக்க படவேண்டியது. இவர்கள்தான் பிஞ்சிலே நஞ்சை விதைக்கும் கொடியவர்கள்! இதுபோல் சிந்திப்பவர்களது பொருளாதாரத்தை பிடுங்கி விட்டு ரோட்டுக்கு கொண்டு வரவேண்டும். எப்படி ஏழைகளாக வாழ்வது என்று இவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். இந்தியாவின் வளமே வெள்ளை உள்ளம் படைத்த ஏழை மக்களே!! ஒழுக்கம் மற்றும் எல்லா விசயங்களிலும் பணக்காரர்களை விட ஏழை மக்களே சிறந்து விளங்க கூடியவர்கள்.
Title: Re: பிஞ்சிலே நஞ்சை விதைக்கும் கொடியவர்கள்!!
Post by: RemO on January 14, 2012, 06:12:38 PM
naadu munera kulanthaikaln aarama kalvi rompa mukiyam
aaramba kalvi than oruvar nala kudimagana vara uthavum antha kalviyaiye ipadi pana petham kaatti kidaikalaina entha oru naadum munera mudiyathu
Title: Re: பிஞ்சிலே நஞ்சை விதைக்கும் கொடியவர்கள்!!
Post by: Yousuf on January 14, 2012, 08:01:03 PM
உண்மைதான் ரெமோ!

நன்றி!
Title: Re: பிஞ்சிலே நஞ்சை விதைக்கும் கொடியவர்கள்!!
Post by: Global Angel on January 19, 2012, 02:00:14 AM

தற்போது உள்ள இந்த நிலைமை ஏற்கனவே அறிவாளிகளாகவும் வசதியாகவும் உள்ள மாணவர்களை மேலும் உயரத்தான் ஒழிய .... ஏழை மனவர்கலாகளை உயர்த்த அல்ல  போலும் ......  ஒரு ஏழை மாணவனை உயர்த்துவதில் உள்ள கடமை இனரவேண்டும் ஆசிரியர்கள் .... அரசும் தனியார் பாட சாலைஹளில் கட்டாய ஏழை மாணவர் சேர்ப்பு  கொண்டு வரவேண்டும்  அப்போதுதான் ஏழைகளுக்கும் வாழ்வு விடியல் கிடைக்கும்
Title: Re: பிஞ்சிலே நஞ்சை விதைக்கும் கொடியவர்கள்!!
Post by: Yousuf on January 19, 2012, 09:17:20 AM
நன்றி ஏஞ்செல்!