FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on February 10, 2016, 11:10:53 PM
-
பச்சயம் இழந்து
நோக்கமிழந்து
வாழ்வில் வேறுபட்டு
முறிந்து தொங்கிக்கொண்டிருந்தேன்
பறித்தாய்
துளையிட்டு
ராகமிசைக்கும் புல்லாங்குழலாக்கினாய்
வாசித்து மகிழ்ந்தாய்
பின்
நீயே தான்
ஒரு குளிர்கால நள்ளிரவில்
ஒடித்து தீ மூட்டி
குளிர் காய்ந்தாய்
-
ஏன் புல்லாங்குழலை இடையில் நிறுத்திவிட்டீர்கள்? இன்னும் கொஞ்சம் வாசித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் . நானும் மகிழ்ந்திருப்பேன். ....வாழ்த்துக்கள்