FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 10, 2016, 10:40:44 PM
-
மேத்தி பன்னீர்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fpnn.jpg&hash=a49391b61cff151cf4586f5106b853c443b1a52d)
தேவையான பொருட்கள் :
பன்னீர் – 1 கப்
எண்ணெய் – 3 ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 5 பல்
வெங்காயம் – 2
தக்காளி – 1
உப்பு – சுவைக்கு
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
கரம் மசாலா – அரை ஸ்பூன்
வெந்தயக்கீரை – 1 கப்
சீரகம் – அரை ஸ்பூன்
ஏலக்காய் – 2
செய்முறை:
* வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெந்தயக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளி போட்டு வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின் நன்றாக ஆற வைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
* மற்றொரு கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெந்தயக்கீரை போட்டு 2 நிமிடம் வதக்கிய பின்னர் பன்னீரை போட்டு 3 நிமிடம் வதக்கி தனியாக வைக்கவும்.
* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம், ஏலக்காய் போட்டு தாளித்த பின் அரைத்து வைத்துள்ள வெங்காய கலவையை ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்து கிரேவி பக்குவம் வந்ததும் உப்பு, வதக்கி வைத்துள்ள வெந்தயக்கீரை பன்னீர் சேர்த்து 4 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
* சுவையான மேத்தி பன்னீர் ரெடி.
* அது சப்பாத்தி, ரொட்டி, தோசைக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.