FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on February 10, 2016, 07:22:45 PM

Title: புதுசா கல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஒரு ஒப்பந்தம்.....! படித்ததில் பிடித்தது!
Post by: MysteRy on February 10, 2016, 07:22:45 PM
புதுசா கல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஒரு ஒப்பந்தம்.....! படித்ததில் பிடித்தது!

(https://4.bp.blogspot.com/-y8sg148FDQ8/VriIlj3z0LI/AAAAAAAAQl4/Y8HDx9rvwgg/s1600/22.jpg)

புதுசா கல்யாணம் ஆன கணவன் மனைவி
இடையே ஒரு ஒப்பந்தம்.....!
இன்று யார் வந்தாலும் கதவை திறக்க கூடாது என்று முடிவெடுத்தனர்.. அன்றே கணவனுடைய_அம்மா_அப்பா_வந்தனர் இருவரும் அவர்கள் வருவதை பார்த்தனர்... இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.. கணவனுக்கு கதவை திறக்க வேண்டும் என்ற ஆசை...! ஆனால் ,
அக்ரிமெண்ட் போட்டது நினைவுக்கு வந்தது... அதனால் கதவை திறக்க வில்லை அவன்.. அவர்கள் யாரும் இல்லை என்று நினைத்து போய் விட்டனர்.. கொஞ்ச நேரம் கழித்து மனைவியின் அம்மா அப்பா வந்தனர் கதவை தட்டினார்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் மனைவிக்கு கண்கள் கண்ணீரால் குளமானது. என்னால்_கதவை திறக்காமல்_இருக்கமுடியாது_என்று சொல்லி_கதவை_திறந்தாள் ஆனால் கணவன் ஒன்றும் சொல்ல வில்லை.. வருஷங்கள் உருண்டோடின....!
இரண்டு ஆண் குழந்தை பிறந்தது.. மூன்றாவதாக பெண்_குழந்தை பிறந்தது கணவன் பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் பெரிய அளவில் செலவு செய்து அனைவருக்கும் பார்ட்டி கொடுத்து கொண்டாடினான்.. அதற்கு மனைவி இரண்டு ஆண் குழந்தை பிறந்தப்ப இவ்வளவு பெரிய அளவில் கொண்டாட வில்லை ஏன் பெண்_குழந்தை பிறந்தவுடன் இவ்வளவு பெரிய பார்ட்டி கொடுக்கிறீங்க என்று கேட்டாள் ... !
அதற்கு கணவன் ரொம்ப நிதானமாக ஏனெனில் பிற்காலத்தில்
எனக்காக கதவை திறக்க ஒரு பெண் பிறந்துவிட்டாள்...!!
என்றான் கர்வத்துடன்....!!!