FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 08, 2016, 07:18:03 PM
-
ரவா லட்டு
(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/12631271_1534099990220804_6972340162784536840_n.jpg?oh=252ced9e10811d43616de11d379c4502&oe=57320050)
சர்க்கரை - 1/2 கிலோ
ரவா - 3/4 கிலோ (ரோஸ்ட் செய்தது சிறந்தது)
பால் - 1/4 லிட்டர்
நெய் - 50 கிராம்
முந்திரி - 10
திராட்சை - 10
ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
செய்முறை:
ரவாவை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். அதனை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
சர்க்கரையையும், ஏலக்காயையும் மிக்ஸியில் தனித்தனியே பொடித்துக் கொள்ளவும்.
பிறகு சர்க்கரையையும், ரவையையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.
இந்த கலவையில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
பிறகு காய்ச்சிய பாலை சிறிது சிறிதாக சேர்த்து உருண்டை பிடிக்கவும்.
கையில் எடுக்கு பதத்திற்கு சூடாக இருக்கும் போதே உருண்டை பிடிக்கவும். அப்போது தான் உருண்டை உதிராமல் இருக்கும்