FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 08, 2016, 04:54:09 PM
-
பொட்டுக்கடலை லட்டு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fpoddu.jpg&hash=6fed40b89ed1381ab139811a65ccc569082aaf51)
தேவையான பொருள்கள் :
பொட்டுக்கடலை – 200 கிராம்
வெல்லம் – 100 கிராம்
முந்திரிப் பருப்பு – 10
நெய் – 3 மேஜைக்கரண்டி
மிதமான வெந்நீர் – 50 அல்லது 75 ml
செய்முறை :
* பொட்டுக்கடலை மற்றும் முந்திரிப் பருப்பை சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். வெல்லத்தை துருவி கொள்ளவும்.
* இரண்டையும் ஒரு பாத்திரத்தில் நன்றாக கலந்து வைக்கவும்.
* பின்னர் வெந்நீர் மற்றும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாகும் வரை நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
* எலுமிச்சை அளவு மாவை எடுத்து நன்றாக உருண்டையாக உருட்டி வைக்கவும். மீதமுள்ள மாவையும் இவ்வாறே செய்யவும்.
* சுவையான பொட்டுக் கடலை லட்டு ரெடி.
* இது குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடிய சத்தான லட்டு.