FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 08, 2016, 09:47:32 AM

Title: ~ செம்பருத்தி பூ தோசை ~
Post by: MysteRy on February 08, 2016, 09:47:32 AM
செம்பருத்தி பூ தோசை

(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/12670131_1534073410223462_5118983980199138947_n.jpg?oh=4a635b2e164445fd8737bf840b17a483&oe=572E6AD8)

தேவையான பொருட்கள் :

செம்பருத்தி பூ – 6
தோசை மாவு – 250 கிராம்
நல்லெண்ணெய் – தேவைக்கு
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
ப.மிளகாய் – 2

செய்முறை:

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்
* செம்பருத்தி இதழ்களை அரைத்து தோசை மாவுடன் கலக்கவும்.
* அடுத்து அதில் வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பலை சேர்த்து கலந்து தோசை வார்த்துக் கொள்ளவும்.
* குழந்தைகளுக்கு சூட்டினால் இருமல் உண்டாகும்போது இந்த தோசையை வார்த்துக் கொடுக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது. பெண்கள் மாதவிடாய் நாட்களில் இதை சாப்பிட்டு வருவது மிக நல்லது