FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 07, 2016, 09:33:57 PM
-
கத்திரிக்காய் பக்கோடா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fghtyu-e1454344393964.jpg&hash=7c4607b2801e5c06a80dcd8e7ed212f1c8257fa8)
தேவையான பொருட்கள் :-
கத்திரிக்காய் – 2
கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
*ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி, கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
*பின்னர் கத்திரிக்காயை நன்கு நீரில் கழுவி, அதனை வட்டமாகவோ அல்லது நீளமாகவோ நறுக்கி நீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
*பின்பு கத்திரிக்காயை எடுத்து, அதில் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
*ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கத்திரிக்காயை மாவில் போட்டு பிரட்டி எண்ணெயில் போட வேண்டும்.
இதேப் போன்று அனைத்து துண்டுகளையும் பொரித்து எடுத்தால், கத்திரிக்காய் பக்கோடா ரெடி!