FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on February 07, 2016, 09:46:37 AM
-
மூலச்சூடு, இருமல், சளி தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் கஞ்சாங்கோரை
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/12647109_1533670420263761_8234632444479665259_n.jpg?oh=f82aed17b62637c02cb7f9b7f462cd11&oe=573E2C45&__gda__=1463294500_1445920113d5da8d875de32985ca3d5e)
மூலிகையின் பெயர் :- கஞ்சாங்கோரை.
தாவரப்பெயர் :- ocimum canum
பயன்தரும் பாகங்கள் :- இலை, விதை மற்றும் பூ.
வேறு பெயர்கள் :- நாய் துளசி, சங்கரத்துளசி மற்றும் பேய் துளசி என்பன.
* இலை கோழையகற்றி இருமல் தணித்தல், உடலில் வியர்வையைப் பெருக்குதல், வெப்பம் மிகுத்து ஆற்றலை அதிகப்படுத்துதல், முறை நோய் நீக்கல், விதை தாதுவெப்பு அகற்றல் ஆகிய செய்கைகளையுடையது.
* இலைச்சாற்றில் 30 துளி, சிறிது பாலுடன் குழந்தைகளுக்குக் கொடுக்க மாந்தக் கழிச்சல், விக்கல், இருமல், சளி ஆகியவை குணமாகும்.
* இலையை அரைத்துச் சுண்டைக் காயளவு தயிரில் கலந்து காலை மாலை கொடுக்க மூலச்சூடு, கணச்சூடு, மேகநோய் தீரும்.
* பத்து கிராம் இலையும், ஒரு கிராம் மிளகும் சேர்த்து அரைத்து வெந்நீரில் கொடுக்கச் சளி வெளியாகி மார்ச்சளி, காசம், இருமல், ஆரம்ப எலும்புருக்கி ஆகியவை தீரும்.
* இலையை விளக்கெண்ணையில் வதக்கி இளஞ்சூட்டில் ஆசனவாயில் கட்டி வர மூலத்தில் நெளியும் பூச்சிகள் ஒழிந்து அரிப்பு தினவு ஆகியவை தீரும்.
* இலையை அரைத்துத் தடவிக் குளிக்க சொறி, சிரங்கு தீரும்.
* இலைப்பூவுடன் வசம்பு சேர்த்து அரைத்துத் தடவி ஒரு மணி நேரம் கழித்துக் குளிக்க பத்துப் பதினையிந்து நாள்களில் பத்துக்கால் பேன் ஒழியும்.
* இலையை உலர்த்திப்பொடித்து 5 கிராம் 100 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டிப் பால் சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட்டு வர சளி தொடர்பான நோய்கள் அகலும்.