FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on February 07, 2016, 01:06:50 AM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi328.photobucket.com%2Falbums%2Fl333%2Frosevini1%2Fsad_night_crow_graveyard_woman_dark_fantasy_hd-wallpaper-1550022_zpsq5xrvmxd.jpg&hash=26e832a53aedf44f766aba967473a4bba7c4a6f9) (http://s328.photobucket.com/user/rosevini1/media/sad_night_crow_graveyard_woman_dark_fantasy_hd-wallpaper-1550022_zpsq5xrvmxd.jpg.html)
இருள் கிழித்த
நிலவொன்று
காணாமல் சென்றிந்தது
விழி விரித்து
நோக்கிய யாவிலும்
இருள் படர்ந்து
எதுவும் புலப்படவில்லை ...
கண்களை கூசி சுருக்கி
விழித்து உருட்டி மடித்து
இமைத்து ...
எந்த வித்தையும்
எடுபடுவதாய் இல்லை ...
சரி
கைக்கெட்டுமா
இரு கை வீசி
துளாவித தேடுகிறேன்
தொலைத்த இதயத்தை ..
அதை
மீண்டும்
மீண்டு வராமல்
புதைத்துவிட ...
-
அழகான வரிகள்
மனம் கவர்ந்த வரிகள்
உணர்வுப்பூர்வமான கவிதை
தொடர வாழ்த்துக்கள் தோழி... :)
உண்மைதான் தோழி... தொலைக்கப்பட்ட நினைவுகளையும் தொலைத்த உறவுகளையும் மீண்டும் தேடிக்கொள்வது அரிது. தொலைத்துவிட்ட ஒருவரை தேடும் தருணம் தொலைத்த நேரத்தையும் சேர்த்து தேடுகிறது... தொலைத்த இடம் தெரிந்தும்....!! தேடத் தவிர்த்தவைகள் ஏராளம் இவ்வுலகிலே.....!!! :)
அழகிய ரோஜாக்கூட்டமே
தொலைத்த இதயத்தை,
இருக்குமிடம் தெரியாமல்
திருப்பி பெற
மனம் வராமல்
புதைத்திட நினைத்தால்
பதிலின்றி
விலகிப் போகுமே?
காதல் கூட...! :) :)
-
angel உங்கள் வரவு நல்வரவாகுக. உங்களை மறுபடி பார்ப்பது மனதுக்கு சந்தோசமாக இருக்கு