FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on February 06, 2016, 09:48:07 PM
-
என்றும் பதினாறு நீங்கள் இதில் ஏது
எண்ணெய்ப்பசை சருமம் கொண்டுள்ளவர்களுக்கு நிறைய பயன்கள் உள்ளன. பொதுவாக எண்ணெய் பசையுள்ள சருமமத்தில் முகப்பருப்பிளவு அதிகம்
ஏற்படாது. எண்ணெய் பசை சருமம் கொண்டுள்ளவர்களுக்கு சருமத்தில் வறட்சி ஏற்படாது.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fgfr.jpg&hash=ad90ff6b42c493f791103d1e32823f5da12a76e4)
மற்றும் பொதுவாகவே எந்த காலநிலைகளிலும் முகம் பொலிவுற திகழும். இயற்கையாகவே அவர்கள் முகப்பொலிவு கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்..
• எண்ணெய் பசை உள்ள சருமம் கொண்டவர்கள் எப்போதும் இளமையாகவே தோற்றமளிப்பார்கள். அதனால் நீங்கள் உங்களது வயதைப் பற்றி கவலையடையவே வேண்டாம்.
• மேக்-கப் செய்யும் போது அதற்கு முன் அது அதிக நேரம் நிலைத்து இருக்க ஆயில் படிமம் இட வேண்டும். ஆனால் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு அது தேவையே இல்லை மேக்கப் வல்லுனர்களும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு மேக்-கப் செய்யவே அதிகம் விரும்புவர்.
• எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் அடையும் இன்னொரு பயன், உங்களது முக சுருக்கங்களை இது மறைத்துவிடும். உங்களது சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை நிரம்பியிருந்தால், தினமும் அதிக அளவு தண்ணீர் பருகுங்கள். இது எண்ணெய் பசை மிகுதியை கட்டுப்படுத்தும்.