FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 06, 2016, 08:59:42 PM
-
மஷ்ரூம் குழம்பு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2FOyster-mushroom-kuzhambu1-e1454310635976.jpg&hash=271cefaf5f9469c469a1f792d43d7acb8432d939)
மஸ்ரூம்-250 gms
சின்ன வெங்காயம்-6 or 7
பெரிய வெங்காயம் -1
தக்காளி -1 பெரியது or 2 சிறியது
சாம்பார் பொடிor குழம்பு பொடி-1 டீ ஸ்பூன் கோபுரமாக அளந்து எடுக்கவும்
or
சாம்பார் பொடிor குழம்பு பொடி இல்லை என்றால் அதற்கு பதில்
சிவப்பு மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் சேர்க்கவும்
மஞ்சள் தூள் – சிறிது
சோம்பு – 1 ஸ்பூன்
தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
மல்லி தழை – சிறிதளவு
கசகசா-1 டீ ஸ்பூன் or முந்திரி பருப்பு-5
இஞ்சி-சிறிது
பூண்டு – 2 பல்
உப்பு ருசிகேற்ப , எண்ணெய் தேவைகேற்ப
தாளிக்க
பட்டை -1
கிராம்பு-2
கல்பாசி சிறிது ,
கறிவேப்பிலை
அரைக்க
ஒரு டீ ஸ்பூன் எண்ணையில் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி இவற்றை பொன் நிறமாக வதக்கி,இவற்றுடன்
தேங்காய், சோம்பு, ,கசகசா or முந்திரி பருப்பு வைத்து அரைத்து கொள்ளவும்.
செய்முறை
முதலில் மஸ்ரூம் clean செய்து கட் செய்து வைத்து கொள்ளவும்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ததும் பட்டை ,
கிராம்பு,கல்பாசி ,கருவேப்பிலை போட்டு தாளித்து பின் பொடியாக நறுக்கி வைத்து உள்ள பெரியவெங்காயம் போட்டு வதக்கவும்,வெங்காயம் வதக்கியதும் தக்காளி போட்டு வதக்கி மஞ்சள் ,மிளகாய்த்தூள் மற்றும் தானிய தூள் or சாம்பார் பொடி போட்டு வதக்கி மஸ்ரூம்,அரைத்து வைத்து உள்ள மசாலா போட்டு கொதிக்க வைத்து.க்ராவி குழம்பு பதம் வந்ததும்,மல்லித் தலை போட்டு . அடுப்பை அணைக்கவும்.
குறிப்பு:
இது சப்பாத்தி ,ரைஸ் ,இட்லி ,தோசைஉடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
இது மட்டன் குழம்பு போல் இருக்கும்