FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Forum on February 01, 2016, 11:01:01 PM

Title: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2016)
Post by: Forum on February 01, 2016, 11:01:01 PM
காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி - என்றென்றும் காதல்


எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு நண்பர்கள் இணையதளம் சிறப்பு கவிதை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது .

உங்களின் உள்ளம் கவர்ந்தவர்களுக்கு  மனதில் உள்ள காதலை கவிதைகளாய் வெளிப்படுத்தலாம். உங்களின் காதலர் தின வாழ்த்துக்களை கவிதைகளாய் வெளிபடுத்த  உங்கள் கவிதைகளை இப்பகுதியில் பதிவிடலாம்.  உங்கள் கவிதைகள் கண்டிப்பாக காதலை பற்றியதாக இருக்க வேண்டும். எதிர் வரும் 09.02.2016  வரை உங்கள் கவிதைகளை இங்கே  பதிவு செய்யலாம் ....

என்றென்றும் காதல் நிகழ்ச்சி ஊடாக உங்கள் கவிதைகள் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று  உங்கள் இதயங்களை வந்தடையும் ....
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2016)
Post by: thamilan on February 02, 2016, 06:01:17 PM
தினம் தினம் காதலிக்கும்
காதலர்கள்  நமக்கெதற்கு
ஒரு காதலர் தினம்
மாதத்தில் ஒரு முறை மறைந்து
ஒரு முறை முழுதாக காட்சியளிக்கும்
நிலவுக்கு தான்
அமாவாசையும் பவ்ர்ணமியும்

தினமும் ஒளி வீசும் சூரியனுக்கு 
இவை  எதற்கு
என்றாலும்
நமது காதலை நினைத்துப் பார்க்க
இந்த நாள் தேவை தான்

ஊருக்குள் நான்
மழையாகப் பொழிந்திட
மேகமாக வந்தவளே
காதலை என்மேல் மட்டும் வை
அன்பை அனைவர் மேலும் வைத்திடு என
அன்புப் பாடம் நடத்தியவளே
உன்னை நினைத்துப் பார்க்க
ஒரு ஜென்மம் போதாதடி
மொத்த அழகையும்
குத்தகைக்கு எடுத்தவளே
 
இரவோடு விளையாடும் இளந்தென்றல்
உன் கருங்கூந்தல்
செவியோடு செந்தமிழ் சேதி சொல்லும்
உன் காதணிகள்
காற்றோடு பண்பாடும் கடலைகள்
உன் ஆடைகள்
மலர்களோ என தேனீகள் மொய்க்கவரும்
உன் தேனிதல்கள்
அலைகடலோடு துள்ளும் மீன்களை எல்லாம்
குத்தகைக்கு வாங்கிய
உன் கண்கள்
பதினாறு வயதினிலே உன் அழகெல்லாம்
பாவாடை தாவணிக்குள் சங்கமம்

அள்ள அள்ள குறையாத
அட்சத பாத்திரம் நீ
அருந்த அருந்த முடியாத
அமுத சுரபி நீ
உன் அழகுக் கடலில் நீந்தி
கரை சேர முடியாமல் தத்தளிக்கும்
நீச்சல்காரன் நான்
என் கரம் பிடித்து
கரை சேர்க்க மாட்டாயா

சில காதல்களும் நிலைப்பதில்லை
பல காதலர்களும் நிலைப்பதில்லை
காதலர் தினம் சரி என்று நிலைக்கட்டும்

Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2016)
Post by: சக்திராகவா on February 06, 2016, 08:58:42 AM
ஒரு சில நொடிகளில்
ஓர பார்வையும்
ஒருவிரல் ஒதுக்கும்
கண்மறை கூந்தலும்!

கன்னம் சிவக்கும்
சின்ன சிரிப்பும்
கசங்க பிறந்த
கைக்குட்டை காண்பதும்!


காதல் மட்டும்
இல்லை என்றால்
கற்பனை வடிவில்
உயிர் பெறுமா?

மனங்கள் சேர்ந்தால்
மதங்கள் மாறும்
சாதித்த காதலில்
சாதியும் சாகும்

நித்திரை தொலைந்து
முத்திரை பதிக்க
முயற்சியும் தந்து
முன்னேற வைக்கும்


இத்தனை செய்யும்
காதலுக்கோர்
காதலர் தினமது
சரிதானே!
-சக்தி
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2016)
Post by: MyNa on February 06, 2016, 10:25:27 PM
நினைவுகளின் சங்கமம்..

ஒரு நாளும் எண்ணியதில்லை
அந்தக் கள்வனுக்காக மீண்டும்
ஒரு முறை இன்று என் கரங்கள்
இக்கவிதையைக் கிறுக்குமென்று

கண்ணோடு கண் பார்த்ததில்லை
கையோடு கை கோர்தத்தில்லை
முகம் பார்த்துப் பேசியதில்லை
ஆனாலும் தினம் நினைக்க தவறியதில்லை

முதன் முறை அக்கள்வனை கண்ட நொடி
இன்றும் சற்றும் மறக்கவில்லை எனக்கு
என் கற்பனை நாயகன் உயிர்பெற்றெழுந்து
என் முன்னே நிற்பதை உணர்ந்தவளாய் நான்

அதோ ஏனோ மாயம் அதே உணர்வு
என் கள்வனுகுள்ளும் உதயமானது
அந்த நொடி எங்களுகிடையே வார்த்தைகள் விரதமிருக்க
கண்கள் மட்டும் மொழி இன்றி மௌனமாய் பேசிகொண்டது

இந்த உணர்வுக்கு பெயர் ஏதோ தெரியாது 
ஆனால் இது எங்களுக்கு புதிதான ஒன்று
நாட்கள் எங்களையே எங்களுக்கு அறிமுகம் செய்தது
எங்கள் சிந்தனைகள் ஒன்றினைந்தவாறே இருந்தன   

எது எப்படியாகினும் காலம் நடத்திய திருவிளையாடலால்
இன்று நாங்கள் எங்கள்  உறவுக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டு
வாழ்க்கை  பாதையில் முன்னோக்கி  பயணிக்கின்றோம்
உணர்வுகளை அடி மனதிலேயே புதைத்து விட்டு

கடமையும் பாசமும் பெரிதென எண்ணி
இரு மனமும் ஒன்றிணைந்து ஒருதலையாய்
அன்று துளிர் விட்ட அந்த உணர்வுக்கு தீயிட்டு
இன்றும் நட்பெனும் செடிக்கு நீரிட்டு கொண்டிருகின்றோம்

இது தோல்வி, வலி என ஒடுங்கி விடாமல் 
இதுவும் கடந்து போகும் என அறிந்து புரிந்தவளாய்
என்  வாழ்வில் மாற்றங்களை  உண்டாக்கிய இந்நினைவுகளுடன்
சிகரத்தை நோக்கி வெற்றி பயணத்தை தொடங்கியவலாக நான் ...

என்றென்றும்  நினைவுகளை  சுமந்தபடி
~ மைனா தமிழ் பிரியை ~
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2016)
Post by: SweeTie on February 07, 2016, 10:57:47 PM
சாட்சிக்கு  ஒரு முத்தம்

வெட்கத்தில்  நாணிய
நெற்கதிர்  போலானேன்  - அவன்
கண்கள்  என்னை உள்வாங்கியதும்
நீல வானம் நாணத்தில்
சிவந்து
ஊதா  பூக்களை சிந்தியதோ
குளிர் தென்றல் இரவலாய்
அனல் காற்றை வாங்கியதோ
பாடும் குயில்கள்
விடுமுறையில் சென்றனவோ 

வானில்  பறக்கும் பட்டம்போல் 
ஏன் இந்த படபடப்பு
உடம்பில் உஷ்ணம்  பரவுவதேன்
தலை நிமிர்த்துகிறேன்
என்னை அறியாமலே ……..
அவன் பார்வையில் மாற்றமில்லை
தப்பித்து ஓடிவிடலாமா 
உள்  மனம் கேட்கிறது
வேண்டாம் 
அறிவு ஆணையிடுகிறது
சொல்லிவிடு உன் காதலை

அண்மிக்கிறான்
இடைவெளி குறைகிறது
அவன் கைப் பிடியில்
சிக்கியது  என் கைகள்
விடுவிக்க முடியவில்லை
விடுவிக்க மனசும் இல்லை
எல்லாம் ஒரு நொடியில் 
என்னை இழந்தேன் அவனிடம்
என் காதலைச் சொல்ல
வார்த்தைகள் சிக்கித்தவித்தன
தொண்டையில்   
மௌனமே சொர்க்கமானது 
'இச்'  என்ற முத்தம்  சாட்சியானது   
சிவப்பு ரோஜாக்கள்   
இதழ்களைச் சொரிந்து
வாழ்த்துப் பாடின   
காதல் வாழ்க  என ....

 
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2016)
Post by: பவித்ரா on February 09, 2016, 02:24:49 AM
காதல் ,வாழ்க்கை துணை தேடலின்
 ஒரு அற்புத உணர்வாக இருப்பதால்
என்னவோ பலரின் வாழ்க்கையில்
வேறு வேறு விதமாக
 பயணித்து கொண்டிருகிறது ...

காதல் புனிதமானதா இல்லையா
 தெரியாது எனக்கு .ஆனால்
எந்த வித எதிர் பார்ப்பும்
 இல்லாமல் இருந்தால் அது நட்பு ...

அவளது எண்ணத்தில்
இவன் இருந்தால் என் வாழ்க்கையில்
சந்தோஷம் நிலைக்கும்
எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது
என்று அனைத்தும்  எதிர் பார்த்து வந்தால்
அதுவும் காதல் தான் ...

புரிதல் இல்லையா?
 இன்றே பிரிதல் நன்று ,
என்னையும் வருத்தி உன்னையும்
வருத்தி நாம் கொண்ட காதலையும்
வருத்துவதை விட முடிந்தால்
குறை கண்டு திருத்த முயற்சி செய்
இல்லையேல் உன் வழி பயணத்தை நீ தொடர்
இனி மீண்டும் அந்த தவறு
உன் வாழ்வில் நிகழா  வண்ணம்
பார்த்துக்கொள் ...

ஏன் என்றால் ஒவ்வொரு மனிதனின்
வாழ்க்கையின் வாழும் காலங்கள்
மிகவும் குறைவு நினைத்த வாழ்க்கை
 நிறைவோடு வாழா விடினும்
அந்த வடுவோடு உங்கள் வாழ்க்கையை
நிறைவாக வாழ பழகுங்கள் ...

யார் கண்டது
வசந்தம் உங்கள் வீட்டு வாசற்கதவை
மீண்டும் ஒரு முறை தட்டலாம்
அதே காதலோடு ....

கவிதையில் குறைகள் இருப்பின் என் pvt வந்து பகிரவும்
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2016)
Post by: Maran on February 09, 2016, 12:52:06 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1117.photobucket.com%2Falbums%2Fk600%2FMadrasMARAN%2FPoems%2Fkathal_zps8agpeiri.png&hash=9c79c4de81e156b19adfabd42806b1290c50d85d)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fs14.directupload.net%2Fimages%2F120304%2Fv2wpql4g.gif&hash=ef1a1cd7c4fd887cefb1ef14d500d310629f40d2)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1117.photobucket.com%2Falbums%2Fk600%2FMadrasMARAN%2FPoems%2Fkathal2_zpst9mrncst.png&hash=3422e2cb4f2eeaf26105025ee375f326a212e007)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fs7.directupload.net%2Fimages%2F120304%2Fyeil56rq.gif&hash=0763f0825bb9a952165fe5483a3fd384f40862fc)
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2016)
Post by: Global Angel on February 11, 2016, 07:39:44 PM
இந்த நாட்களின்
சில்லீர்ப்புக்கள்
இமை கடந்தும்
இருள் கடந்தும்
இதயத்தை நோக்கி
இறங்கி நகர்கிறது ..

எங்கிருந்தாய்
இரு
பதின்ம வயதுகளை
நான் கடந்து கழியும் வரை ?

எங்கிருந்தாய்
என் இரவுகள் எல்லாம்
இருள் தடவி
இமை உறவு கொள்ளா
தருணங்கள் அனைத்தும் .?

எங்கிருந்தாய்
எரிகின்ற
விரகம் துடைத்து
வான் வெளிகளை
என் உஷ்ணக் காற்று
நிரப்பி நகர்கின்ற தருணங்களில் .. ?

இங்கிருக்கிறாய்
இன்று
இயங்கும்
நாடித்துடிப்புகள் அனைத்தும்
உன் நினைவுகளை
துகள்களாக கலந்து
மூளை முதல்
முழுவதும் நகர்ந்து
இதயத்தில் குடி புகுந்து
இறக்கும் வரை
உன்னை இயக்குவதாக இயம்பி ...

இந் நாளை
ரோஜாக்கள் கொண்டல்ல
வர்ணங்கள் குளைத்தல்ல
என் எண்ணங்கள் துளைத்து
ஒரு
முத்த ஒற்றுதலோடு
முத்தாய்ப்பு வைக்கிறேன்
உன் ஆரம்பத்துக்காக ...