FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 01, 2016, 10:02:22 PM
-
பனீர் பட்டாணி குருமா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2014%2F12%2F19-nethili-karuvattu-kuzhambu.jpg&hash=78c0faf1d15632b23209b650bb281c4a088ddb84)
தேவையான பொருட்கள்:
பனீர் துண்டங்கள் – ஒன்றரைக் கப்
புளிக்காத தயிர் – ஒரு கப்
பெரிய வெங்காயம் – 3
பச்சைப் பட்டாணி – அரை கப்
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
பிரியாணி இலை – 2
கிராம்பு – 2
பட்டை – ஒரு சிறியத்துண்டு
பூண்டு – 2 பல்
மிளகாய்பொடி – ஒன்றரைத் தேக்கரண்டி
தனியாப் பொடி – ஒரு மேசைக்கரண்டி
தக்காளி விழுது – கால் கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
பெரிய வெங்காயத்தைத் தோலுரித்து பொடியாக நறுக்கி, பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அதனை அரைத்து தயிருடன் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் குறைந்த தீயில், பனீர் கட்டிகளை போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பொரித்தெடுத்த பனீரை மிதமான சூடுள்ள தண்ணீரில் போட்டு வைக்கவும்.
பட்டாணியைத் தனியாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் மசாலாப் பொருட்கள், நறுக்கியப் பூண்டு, அரைத்த வெங்காயம் இவற்றைப் போட்டு, குறைந்த தீயில் எண்ணெய் மேலே வரும்வரை வதக்கவும்.
இத்துடன் தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தக்காளி விழுது இவற்றைச் சேர்க்கவும்.
சில நிமிடங்கள் கொதித்த பிறகு, வேகவைத்த பட்டாணியையும், பொரித்த பனீர் கட்டிகளையும் அதில் போடவும்.
நன்கு வெந்த பிறகு இறக்கி, கொத்தமல்லித் தழையைப் பொடியாய் நறுக்கி மேலே தூவிப் பரிமாறவும்.