FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: sasikumarkpm on February 01, 2016, 11:03:13 AM

Title: காதல்_கொண்டேன்‬
Post by: sasikumarkpm on February 01, 2016, 11:03:13 AM
வாடைக் காற்றின் வீச்சினிலே
பேடைதனை தேடித் திரிந்து
ஓடிக் களித்த கிளியினை
கண்ட நாள் முதலாய்
உன்பால் காதல் கொண்டேன்


மோகனக் குயிலது மோகிக்கூவையிலே
பந்திக்கும் பொருட்டாய் பந்தகியினைத்
தான் தேடும் பந்தியினைக்
கண்ட நாள் முதலாய்
உன்பால் காதல் கொண்டேன்


தெறித்திடும் தீங்குழ லோசையது
தெவிட்டாத தெள்ள முதாய்
கருத்தினைக் கவர்கையிலே கலாவமிரு
கூடிக் களிப்ப தனைக்
கண்ட நாள் முதலாய்
உன்பால் காதல் கொண்டேன்


மாரிப் பொழுதினிலே மாலைக்கதிரினிலே
சோலைக் குயிலதுவும் சோடியினை
நாடிக் குலவிடும் முருகினை
கண்ட நாள் முதலாய்
உன்பால் காதல் கொண்டேன்


காணுமிடமெங்கும் கவின்காட்சி வழியுதடி,
காதற்பெருக்கெடுத்து முகங்காண விழையுதடி,
ஆழிப்பெருக்கெடுப்பாய் இன்று ஆசைபெருகுதடி,
சோலை மயிலழகே உனை காண விருப்பமடி..
Title: Re: காதல்_கொண்டேன்‬
Post by: Maran on February 01, 2016, 12:32:13 PM


அருமையிலும் அருமை நண்பா.... வாழ்த்துக்கள்!  :)

அழகான வரிகளில் நீங்கள் காதல் கொண்டதை கவிதையாக பதிவு செய்து இருக்கிறீர்கள் போல...  :)  :)

தனிமை கனவுகளை மட்டுமே அசைபோட வைத்தால் காதல் மிக அழகான உணர்வுதான்... வெளிகாட்ட தெரியாத காதல் நிராகரிக்கப்படுகிறது.



Title: Re: காதல்_கொண்டேன்‬
Post by: SweeTie on February 01, 2016, 09:22:08 PM
உங்கள் கனவுக் காதல் நிறைவேற என்  வாழ்த்துக்கள் தோழரே. 
அழகான வரிகள்.  தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்.
Title: Re: காதல்_கொண்டேன்‬
Post by: aasaiajiith on February 02, 2016, 11:22:05 AM
சந்தத்தினை சொந்தம் கொண்டாடியபடி
சிந்தியிருக்கும் வரிகள்
ஆதிமுதல் அந்தம்வரை
சுகந்தம் !!