FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 31, 2016, 05:59:40 PM

Title: ~ அவித்த முட்டை பிரை ~
Post by: MysteRy on January 31, 2016, 05:59:40 PM
அவித்த முட்டை பிரை

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2Fetre.jpg&hash=3481243feccd67847c6c864ad71549779ca4ab39)

தேவையான பொருட்கள்:

முட்டை – 4
வெங்காயம் – 1
இஞ்சி – சிறிய துண்டு
கஸ்தூரி மேத்தி – சிறிது
தனியா தூள் – கால் ஸ்பூன்
மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை
கரம் மசாலா – கால் ஸ்பூன்
மிளகாய் தூள் – கால் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
சீரகத்தூள் – கால் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

* வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்
* கொத்தமல்லி. இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முட்டையை வேகவைத்து ஓட்டை உடைத்து விட்டு ஒரு முட்டையை 4 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சியை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கவும்.
* வெங்காயம் சிறிது வதங்கிய பிறகு கஸ்தூரி மேத்தி, தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், உப்பு போட்டு 5 விநாடிகள் வதக்கவும்.
* அடுத்து அதில் வெட்டி வைத்த முட்டையை போட்டு உடையாமல் மசாலா முட்டையில் அனைத்திலும் படும்படி பிரட்டவும்.
* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
* சுவையான அவித்த முட்டை பிரை ரெடி.