FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 31, 2016, 08:57:37 AM
-
எலுமிச்சை ஊறுகாய்
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/12642993_1532478190382984_2811731608047989919_n.jpg?oh=9ea48bb185b2f6cd7600c0055a0146c3&oe=5744D810&__gda__=1462568941_656307115d07be3464511b30c075e83f)
தேவையானவை:
பெரிய எலுமிச்சை - 4
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - 3 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
கடுகு - 2 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன்
வெந்தயத்தூள் - அரை டீஸ்பூன்
செய்முறை:
எலுமிச்சை பழங்கள் நன்கு கழுவி துடைத்து ஒரு பழத்தை எட்டு துண்டுகள் வீதம் அனைத்து பழங்களையும் நறுக்கி விதைகளை நீக்கி கொள்ளவும். ஒரு சுத்டமான கண்ணாடி பாத்திரத்தில் நறுக்கிய எலுமிச்சை துண்டுகள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கிளறி ஒரு வாரம் ஊற விடவும். பூஞ்சையை தவிர்க்க எலுமிச்சையை தினமும் ஒரு மணி நேரம் சூரிய ஒளியில் வைத்து எடுக்கவும். ஒரு வாரத்தில் எலுமிச்சை நன்கு உப்பில் ஊறியிருக்கும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து இத்துடன் ஊற வைத்த எலுமிச்சையைச் சேர்த்து மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் வெந்தயத்தூள் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் கிளறி இறக்கி சுத்தமான பாத்திரத்தில் எடுத்து வைத்து பரிமாறவும்