FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on January 30, 2016, 05:40:32 PM
-
தொப்பையை வேகமாக குறைக்க தினமும் இந்த ஜூஸை 2 டம்ளர் குடித்து வந்தால் குறையும்.
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/12642498_1532469580383845_2592908619826798036_n.jpg?oh=d56fc2bf837d4bbee092e43b705b60d2&oe=572B3DC2&__gda__=1463703871_98bd443ec0c67c01915700791d002a49)
உங்களால் பேண்ட் பட்டனைப் போட முடியாத அளவு தொப்பை வெளியே எட்டிப் பார்க்கிறதா? இந்த தொப்பையைக் குறைக்க பல வழிகளை முயற்சித்துள்ளீர்களா? இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைத்தபாடில்லையா? கவலைப்படாதீர்கள். இங்கு தமிழ் போல்ட்ஸ்கை தொப்பையை வேகமாக குறைக்க உதவும் ஓர் அற்புத பானத்தை உங்களுக்காக கொடுத்துள்ளது.
இஞ்சி
இஞ்சி உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும், மலச்சிக்கலை அதிகரிக்கும் மற்றும் தேவையற்ற கெட்ட கொழுப்புக்களைக் கரைக்கும். மேலும் இஞ்சி அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தடுத்து, விரைவில் தொப்பையைக் குறைக்க உதவும். எனவே உங்களுக்கு தொப்பையைக் குறைக்கும் ஆசை இருந்தால், இஞ்சியை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.
எலுமிச்சை
எலுமிச்சை உடலில் இருந்து அனைத்து டாக்ஸின்களையும் வெளியேற்றுவதோடு, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக கரைக்க உதவும்.
கற்றாழை
கொழுப்பைக் குறைக்க உதவுவதில் கற்றாழை மிகவும் சிறப்பான பொருள். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் ப்ரீ ராடிக்கல்களின் வளர்ச்சியைத் தாமதப்படுத்தும். மேலும் இது உடலின் மெட்டபாலிச அளவைத் தூண்டிவிட்டு, கெட்ட கொழுப்புக்களை வேகமாக கரைக்கும்.
வெதுவெதுப்பான நீர்
பொதுவாக எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும் போது, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் குடிப்பது உடல் எடையைக் குறைக்க உதவும். ஏனெனில் வெதுவெதுப்பான நீர் உடலின் வெப்பநிலையை அதிகரித்து, மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கும். உடலில் மெட்டபாலிச அளவு அதிகரித்தால், கலோரிகள் வேகமாக கரைக்கப்படும். வேலும் ஒருவர் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர் குடிக்கையில், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, செரிமான மண்டலத்தின் செயல்பாடு சீராகி, உடல் சுத்தமாகும்.
தேன்
தேன் ஓர் மருத்துவ குணம் நிறைந்த இயற்கை சுவையூட்டி. ஆரோக்கியமற்ற சர்க்கரைக்கு சிறந்த மாற்றுப் பொருள் தான் தேன். இந்த தேன் கூட உடல் எடையைக் குறைக்க உதவும். சரி, இப்போது தொப்பையைக் குறைக்கும் ஜூஸை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
இஞ்சி – 1 டீஸ்பூன்
எலுமிச்சை – 1
கற்றாழை ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் – 1 டம்ளர்
தேன் – சிறிது
செய்முறை
முதலில் இஞ்சியை கற்றாழை ஜூஸில் போட்டு கிளறி 30 நிமிடம் ஊற வைக்கவும். பின் அதில் எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து சேர்த்து கலந்து, 5 நிமிடம் கழித்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, உடனே குடிக்க வேண்டும்.
குடிக்கும் நேரம்
இந்த ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அப்படி இந்த ஜூஸைக் குடித்தால், ஒரு மணிநேரத்திற்கு எதையும் சாப்பிடக்கூடாது. மேலும் இந்த ஜூஸை ஒரு நாளைக்கு 1-2 முறைக்கு மேல் குடிக்கக்கூடாது.