FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 29, 2016, 09:39:31 PM
-
பட்டாணி பிரியாணி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2FCapture36.jpg&hash=3d18ff6e924384f7eadeac3cbf4eb80745f8518d)
பாசுமதி அரிசி – 1 கப்,
வெங்காயம் – 2 (நறுக்கிக் கொள்ளவும்),
தக்காளி – 3 (நறுக்கிக் கொள்ளவும்),
பச்சைப் பட்டாணி – 1 கப்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
பிரிஞ்சி இலை – 1,
முந்திரி – 6,
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
அரைக்க:
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்,
இஞ்சி – ஒரு துண்டு,
பூண்டு பல் – 4,
சோம்பு – அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 3.
அரிசியைக் கழுவி, 2 கப் தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள வற்றை ஒன்று சேர்த்து அரைத்து எடுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, சூடானதும் பிரிஞ்சி இலையை சேர்க்கவும். முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும். கூடவே பட்டாணி, உப்பு, மஞ்சள்தூள், தக்காளி துண்டுகளை சேர்த்துக் கிளறவும். அரைத்து வைத்துள்ள விழுதை விட்டு கலக்கவும். ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் குக்கரில் சேர்த்துக் கலந்து மூடி, 2 விசில் வந்ததும் இறக்கினால் பிரியாணி தயார்.