FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 28, 2016, 09:13:02 PM
-
முட்டை உப்புமா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2Fmaxresdefault3-e1453905623436.jpg&hash=4d5642ed064eb800199763b5d79921ee94269eb0)
தேவையான பொருட்கள்:
முட்டை – 5
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 4
மிளகுத் தூள் – கால் டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உ.பருப்பு – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – தேவையானது
செய்முறை :
1.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு தாளித்து வெட்டிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
2.ஒரு பாத்திரத்தில் முட்டை, துளி உப்பு போட்டு நன்றாக அடித்து வைக்கவும்.
3.கடாயில் வதங்கும் வெங்காயத்துடன் மஞ்சள் தூள் போட்டு அடித்த முட்டை ஊற்றி கிளறவும்.நன்றாக உதிரியாக கிளறி பரிமாறவும்.