FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 28, 2016, 09:02:50 PM
-
கோழி சூப்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2Froasted-garlic-and-chicken-soup-updated-e1453904897383.jpg&hash=982cc460c5d577735ccde14e12d403988cec8dee)
தேவையான பொருட்கள்:
கோழி கறி – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 10
சீரகத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 1
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 5 பல்
பட்டை, லவங்கம் – தலா 1
மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
தனியாத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 /2 டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
1.இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்
2.கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
3.பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய கலவையை குக்கரில் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, நான்கு அல்லது ஐந்து விசில் வரும் வரை வேக விடவும்.
4.உப்பு ருசி பார்க்கவும்.சூடாக பரிமாறவும்.