FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 28, 2016, 08:14:41 PM
-
பீன்ஸ் மசாலா பொரியல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2F-%25E0%25AE%25AE%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AE%25BE-%25E0%25AE%25AA%25E0%25AF%258A%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25B2%25E0%25AF%258D-e1453817661869.jpg&hash=3d83e7367828fa70feb1f96d2cb6bafcc700fd9c)
தேவையான பொருட்கள்:
பீன்ஸ் – கால் கிலோ
பெரிய வெங்காயம் – ஓன்று
தக்காளி- ஓன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி – 1 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சத்தூள்- கால் டேபிள் ஸ்பூன்
கடுகு – அரை டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு- அரை டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – இரண்டு ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
கொத்தமல்லி- சிறிது
செய்முறை :
1.பீன்ஸ் காயை ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்கவும்.
2.பிறகு அதை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, மஞ்சத்தூளை சேர்த்து அரைவேக்காடாக வேகவைக்கவும்.
3.வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
4.வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு வறுக்கவும்.
5.பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு வதக்கி பின்பு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
6.பிறகு தக்காளி, மிளகாய்தூள், சீரகத்தூள் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கி அதில் பீன்ஸை போட்டு, காய் வெந்த நீரை 1/4 கப் ஊற்றி கிளறவும்.தேவையானால் சிறிது உப்பைப் போட்டு வேகவிடவும்.
7.பீன்ஸ்ஸில் மசாலா ஒட்டும் பதம் வந்ததும் கொத்தமல்லியைத் தூவி இறக்கி விடவும்