FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 28, 2016, 08:03:55 PM

Title: ~ வெங்காய சாம்பார் ~
Post by: MysteRy on January 28, 2016, 08:03:55 PM
வெங்காய சாம்பார்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2Fonion-sambar-e1453817519848.jpg&hash=5b58817c2f6e91204b9cc0a249c3e495116dd681)

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு – 100 கிராம்
வெங்காயம் – 200 கிராம்
சாம்பார் போடி – 2 ஸ்பூன்
மஞ்சள் போடி – சிறிது
பெருங்காயம் – சிறிது
கருவேப்பிலை – 1
பச்சை மிளகாய் – 2
கடுகு – 1 /2 ஸ்பூன்
உளுந்து – 1 /2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை – சிறிது
தக்காளி – 1
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவைகேற்ப

செய்முறை :

1.துவரம் பருப்பை நன்றாக வேகவைத்து கொள்ளவும் .
2.அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு கடுகு ,உளுந்து தாளிக்கவும்.
3.பிறகு வெங்காயம், கருவேப்பிலை ,மிளகாய்,பெருங்காயம் எல்லாத்தையும் வதக்கவும் .
4.நன்றாக வதங்கியதும் தக்காளி ,உப்பு சேர்த்து வதக்கவும்.
5.பிறகு சிறிது மஞ்ச போடி,சாம்பார் போடி சேர்த்து கொதிக்கவிடும்.நன்றாக கொதித்தவுடன் வெந்த பருப்புபை சேர்க்கவும்.
6.கடைசியில் புளி கரைசலை சேர்க்கவும்.உப்பு சரிபார்க்கவும்.கடைசியில் கொத்தமல்லி இலை சேர்க்கவும். இப்பொழுது சுவையான வெங்காய சாம்பார் ரெடி